தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். பெருகி வரும் தெரு நாய்களை கட்டுபடுத்த கருத்தடை மையம் உள்ளூரில் இருந்தும் தற்போது கீழுர் பேருந்து நிலையம் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் உள்ள கீழூர் பேருந்து நிலையம் மற்றும் மேலூர் மார்க்கெட் பகுதிகளில் தெரு நாய்கள் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
சாலையில் செல்லும் பள்ளி மாணவர்கள், வெளியூர் செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் துரத்தி வருவதால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தெரு நாய்களால் இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே சாம்பவர் வடகரை பகுதிகளில் சுற்றித் திரியும் நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தெரு நாய்களை கட்டுப்படுத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.