29 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு: 150 மண்டலத் தலைவர்கள் நியமனம்.!

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பு: 150 மண்டலத் தலைவர்கள் நியமனம்.!

எழுதியவர்: Baker BAker August 29, 2026, 11:34 am

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் மண்டல, வட்டார, நகர, பேரூர் மற்றும் கிராம அளவிலான புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான இயக்க மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். திருவாடானை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கரு. மாணிக்கம், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சின்னத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் காருகுடி சேகர் வரவேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட இயக்க மறுசீரமைப்பு திட்டத்தின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் கூட்டத்தில் பங்கேற்று, இயக்க மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து, ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 150 மண்டலத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், அவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன.

கூட்ட நிறைவில் நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!