தென்காசி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் 44 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. நகைகளை மீட்ட கடையநல்லூர் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக்குமார் வெகுவாக பாராட்டினார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல கடையநல்லூர் பகுதியில், கடந்த 11.08.2026 அன்று இரவு சுமார் 12.00 மணியளவில், வீட்டில் தனியாக வசித்து வந்த கணபதியம்மாள் (73) என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து, அவரை மிரட்டி, அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கிறிஸ்டி அவர்கள் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பின்வரும் நபர்கள் கண்டறியப்பட்டனர்.
1. கோகுல் கண்ணன் (36), த/பெ. ஆறுமுகம், மாத்தூர் பகுதி, காஞ்சிபுரம் மாவட்டம்.
2. வேலம்மாள் (48), க/பெ. இசக்கி @ ரமேஷ், மேல கடையநல்லூர்.
குற்றவாளிகள் இருவரையும் அதிரடியாக கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், அவர்களிடமிருந்து மூதாட்டியிடம் பறித்துச் செல்லப்பட்ட 44 கிராம் தங்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, பறிக்கப்பட்ட நகைகளை மீட்ட கடையநல்லூர் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக்குமார் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.