தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 03 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 2,10,000 ரூபாய் மதிப்பிலான 1,500 மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான காவல் துறையினரால் மேற்படி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த முனியம்மாள் குளம் பகுதியை சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் செல்லக்கனி (வயது 58), மானூர் தெற்குப்பட்டியை சேர்ந்த கோமதி என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 48) மற்றும் மூவிருந்தாளி பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பாலசுப்பிரமணி (வயது 56) ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பாளைய மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2,10,000/- ரூபாய் மதிப்பிலான 1,510 மது பாட்டில்கள் மற்றும் விற்ற பணம் 2300/- ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.