உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் – அமைச்சர் ராஜூ வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜூ, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தவெக தொண்டர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். “உள்ளாட்சித் தேர்தலில் திறம்பட செயல்பட்டு அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும். அதற்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும்
தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 10 கண்டெய்னர்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் திருவாடானை, தொண்டி உள்ளிட்ட ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தொண்டியில் நடைபெற்ற இந்த 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், தவெகவின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கும் நிகழ்வாக அமைந்தது.




You must be logged in to post a comment.