“விபத்து நடந்த பிறகுதான் அதிகாரிகள் விழிப்பார்களா?” – பொதுமக்கள் கேள்வி
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை ஏர்வாடி செல்லும் நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்களும், சாலையை நோக்கி நீண்டுள்ள கிளைகளும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் கிளைகள் பார்வையை மறைப்பதால், தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் யாத்திரிகர்கள் விபத்து அபாயத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா? விபத்தைத் தடுப்பதே அரசின் கடமை அல்லவா?” என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, சாலையோரத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் கிளைகளை அகற்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.