25 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் eKYC சிறப்பு முகாம்.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் eKYC சிறப்பு முகாம்.!

எழுதியவர்: Baker BAker August 25, 2026, 11:06 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நியாயவிலைக் கடைகளில் eKYC மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளும் eKYC செய்து பயன்பெறும் வகையில், 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்த்து, மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப் பட்டுள்ள பயனாளிகளுக்கு விரல் ரேகை அடிப்படையிலான eKYC சரிபார்ப்பு மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், கடந்த அக்டோபர் 2023 முதல் eKYC பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உணவுத்துறை அமைச்சர்  அறிவுரையின்படி, இதுவரை eKYC மேற்கொள்ளாத குடும்ப அட்டை பயனாளிகளுக்காக 02.08.2026, 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய தேதிகளில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விற்பனை முனைய இயந்திரம் மூலம் விரல் ரேகை/கண் கருவிழி சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது eKYC பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு, 29.08.2026 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மீண்டும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, இதுவரை eKYC செய்யாத குடும்ப அட்டை பயனாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்:

1. இராமநாதபுரம் – 9445000363

2. இராமேஸ்வரம் – 9445000364

3. திருவாடானை – 9445000365

4. பரமக்குடி – 9445000366

5. முதுகுளத்தூர் – 9445000367

6. கடலாடி – 9445000368

7. கமுதி – 9445000369

8. கீழக்கரை – 9499937032

9. ஆர்.எஸ்.மங்கலம் – 9942889354

எனவே, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக இதுவரை eKYC மேற்கொள்ளாத குடும்ப அட்டை பயனாளிகள், 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!