தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி விலக்கில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – சுரண்டை சாலையில் உள்ள குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் கிராமப்புற சாலைகள் இணைவதால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டு வசதி, எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, குறும்பலாப்பேரி விலக்கு பகுதியில் உடனடியாக தரமான வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகைகள் பொருத்தி, இரவு நேரங்களில் போதிய ஒளி வசதி ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்படும் முன் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.