25 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

எழுதியவர்: Baker BAker August 25, 2026, 10:21 pm

ஹஜ் 2027: மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஹஜ் 2027 புனிதப் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக, மாநில ஹஜ் ஆய்வாளர்களை (State Haj Inspectors) தற்காலிகமாக சவூதி அரேபியாவிற்கு அனுப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழு, மும்பை வரவேற்றுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை எண்.7, நாள் 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாநில ஹஜ் ஆய்வாளர்களுக்கான தற்காலிக பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதியான அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சவூதி அரேபியாவில் மாநில ஹஜ் ஆய்வாளர்களாக பணிபுரியும் காலம், அவர்களது பணிக்காலமாகவே கருதப்படும்.

விண்ணப்பிக்கும் முறை, தகுதி, தேர்வு மற்றும் நியமன நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.hajcommittee.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 27.08.2026 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு 04567-231050 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன்,  தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!