28 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கான, சமூக நல  மாணவியர் விடுதியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால்,  மாணவிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக  போராட்டம். அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.  இரண்டு மாணவிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு.

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கான, சமூக நல  மாணவியர் விடுதியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால்,  மாணவிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக  போராட்டம். அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.  இரண்டு மாணவிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு.

எழுதியவர்: Askar July 28, 2026, 12:18 pm
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கான, சமூக நல  மாணவியர் விடுதியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால்,  மாணவிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக  போராட்டம். அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்.  இரண்டு மாணவிகள் மயக்கமடைந்ததால் பரபரப்பு.
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கான, சமூக நல  மாணவியர் விடுதியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், திங்கள்கிழமை 3 மணி நேரத்திற்கு மேலாக மாணவிகள் விடுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் அரை மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர். இதில், இரண்டு மாணவிகள் மயக்கம் அடைந்ததால்,  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இம்மணவிகளுக்கு  கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவியர் விடுதி உள்ளது. இதில்,  வெளியூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து  வருகின்றனர். இந்த விடுதியில் குடிதண்ணீர்,  உணவு  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால்,  விடுதி காப்பாளர் மஹாலெட்சுமியிடம் புகார் அளித்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத விடுதி காப்பாளரிடம் தொடர்ந்து புகார் அளித்த மாணவிகளை மரியாதை குறைவாக, ஒருமையில்  பேசியதாக கூறப்படுகிறது.
இதனால்,  கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலிருந்த மாணவிகளுக்கு திங்கள்கிழமை குளிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாததால், விடுதி  உதவியாளரிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது,  அவரும் மாணவிகளை மரியாதை குறைவாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், மன வேதனையில் இருந்த. மாணவிகள்  காலை முதலே குளிக்காமலும், உணவருந்தாமலும்
வழக்கம்போல  கல்லூரிக்கு சென்று வந்ததாக தெரிகிறது.  மாலை கழிவறைக் கூட தண்ணீர் இல்லாததால், அதிருப்தி அடைந்த  மாணவிகள் 3  மணி நேரத்திற்கு மேலாக விடுதியில் போராட்டம் நடத்தினர்.
விடுதி எதிரே உள்ள நிலக்கோட்டை – வத்தலக்குண்டு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்
சுமார் அரை மணி  நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களுடன் வத்தலக்குண்டு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததா நிலையில்,  காலை முதலே உணவு அருந்தாமல் இருந்த மாணவிகளில் இருவர் திடீரென மயக்கமடைந்தனர்.
அவர்களை, சக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால்,  அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நிலக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில், விடுதி காப்பாளர்  நடவடிக்கையால், உணவு தண்ணீர் கிடைக்காததால்  மாணவிகளுக்கு ஏற்பட்ட கொடுமையால் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளில் இருவர் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!