சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சார்பில், தொழிற்சங்கங்களில் பெண்களின் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் தாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் “பெண் தொழிற்சங்கங்கள்: தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் தாக்கத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான இருநாள் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் தொடங்கியது.
கேரள மாநிலம் காக்கநாட்டில் உள்ள நொவோட்டல் கொச்சி இன்போபார்க் வளாகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறை ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பெண் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
தொழிற்சங்க அமைப்புகளில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு சிறப்பு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.ஐ.டி.யு. (CITU) தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பி. சத்யா பங்கேற்று, தொழிற்சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் பயிற்சிப் பட்டறை ஜூலை 28 மாலை நிறைவடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.