ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட நிம்மேனி ஊராட்சி, லட்சுமண் குடியிருப்பு பகுதியில் அரசு நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக கிராம மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திரளாக மனு அளித்தனர்.
மனுவில், அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடையாமல் தடுக்கப்படுவதாகவும், குடிநீர் விநியோகத்திற்கான பாதைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு அராஜகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம மயானத்திற்கு செல்ல உரிய பாதை இல்லாததால் இறுதிச் சடங்குகளை நடத்துவதிலும், கோயில்களுக்கு வழிபாட்டிற்குச் செல்வதிலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கிராமத்தின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யவும், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.