ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்திற்குட்பட்ட சின்னக்கீரமங்கலம் பகுதியில், அதிமுகவின் சார்பு அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்திற்குச் சொந்தமான 13 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிரையம் பெறப்பட்டு காலியாக இருந்த அந்த நிலத்தில் சிலர் மண் நிரப்பி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலத்தின் தற்போதைய நிலை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்கள் மீது காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காட்டினால், ஜனநாயக முறையில் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இந்த விவகாரத்தில் உடனடி தலையீடு செய்து, ஆக்கிரமிப்பு முயற்சியை தடுத்து, அரசு பதிவுகளில் உள்ள உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அதிமுக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.




You must be logged in to post a comment.