அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி வீதி உலா
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தென்கிழக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உற்சவ விழா, கடந்த ஜூலை 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
பின்னர், விரதமிருந்த பக்தர்கள் தலையில் பூத்தட்டு ஏந்தி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்தனர். ஊர்வலத்தின் போது இளைஞர்கள் உற்சாக நடனமாடி பக்தி பரவசத்தை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் திரளான பங்கேற்பால் திருவிழா பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான ஜூலை 23ஆம் தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் உற்சவ விழா நிறைவடைய உள்ளது.




You must be logged in to post a comment.