ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்வு பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
காரைக்குடியைச் சேர்ந்த சிவனடியார்கள், கோவில் வளாகத்தில் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து, காலை முதல் மாலை வரை இடைவிடாமல் திருவாசகப் பாடல்களை இசைத்து முற்றோதல் நிகழ்வை நிறைவு செய்தனர். நிகழ்வு முழுவதும் “நமச்சிவாய வாழ்க” என்ற சிவநாம முழக்கங்கள் கோவில் வளாகத்தை பக்தி உணர்வால் நிறைத்தன.
இந்த ஆன்மிக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசித்து அருள்பெற்றனர். பக்தர்களின் திரளான வருகையால் கோவில் வளாகம் விழா கோலமாக இருந்தது .
சைவ சமய மரபுகளையும், திருவாசகத்தின் மகத்துவத்தையும் இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த முற்றோதல் நிகழ்வு, பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.




You must be logged in to post a comment.