15 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சியில் தெருநாய்கள் கட்டுப்பாட்டில் அலட்சியம்? – அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.!

கீழக்கரை நகராட்சியில் தெருநாய்கள் கட்டுப்பாட்டில் அலட்சியம்? – அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.!

எழுதியவர்: Baker BAker July 15, 2026, 10:09 pm

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, பல பகுதிகளில் தெருநாய்கள் குட்டிகளுடன் அதிக அளவில் காணப்படுவதால், இனப்பெருக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகள் ஆவணங்களில் மட்டுமே இருப்பதாகவும், களத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்துடைப்புக்காக ஒரே ஒரு தெருநாயை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்தது போல் காட்டிவிட்டு, பின்னர் எந்தத் தொடர்ச்சியான பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பொதுநிதி பயன்படுத்தப்பட்ட விதம், தெருநாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு திட்டங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து உரிய அமைப்புகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!