15 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பஞ்கவ்யா இயற்கை உரம் தயாரித்தல்; செயல் முறை விளக்க பயிற்சி..

பஞ்கவ்யா இயற்கை உரம் தயாரித்தல்; செயல் முறை விளக்க பயிற்சி..

எழுதியவர்: Abubakker Sithik July 15, 2026, 3:40 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி வேளாண்மை பிரிவு மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா எனும் இயற்கை உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு ஆர்விஎஸ் கிருஷி விஞ்ஞான் கேந்திரா அலுவலர் சுகுமார் மற்றும் வேளாண்மை அலுவலர் வர்ஷினி ஆகியோர் வழிகாட்டினர். விவசாயி கல்யாணி முன்னிலை வகித்தார்.

கோவை காருண்யா பல்கலைக்கழக மாணவிகள் அபிஷா, பபிதா, சுப்ரஜா, அக்ஷிதா, அபிஷா ஹீமதி, மித்திரா, செர்லி, ஜெனிபர், தர்ஷனா, ஜெயஶ்ரீ ஆகியோர் அடங்கிய குழுவினர் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா எனும் இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்த செயல் விளக்கப் பயிற்சியை அளித்தனர்.

மேலும் பஞ்சகவ்யா தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள், தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் அளவு மற்றும் இயற்கை வேளாண்மையில் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி விளக்கமளித்து கலந்துரையாடி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். இதில் சுமார் 100 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய குறிப்பு: பஞ்சகவ்யா என்பது பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து முக்கியப் பொருட்கள் (சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்) மற்றும் பிற இயற்கை பொருட்கள் (வாழைப்பழம், இளநீர், வெல்லம்) சேர்த்து நொதிக்க வைக்கப்படும் ஒரு திரவக் கலவை ஆகும். இது இயற்கை வேளாண்மையில் மிகச்சிறந்த தாவர வளர்ச்சி ஊக்கியாகவும் (Growth booster), பூச்சிக் கொல்லியாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!