கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் எஸ். எம். அய்யூப் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறப்பான வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.