12 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டை அருகே, தனியார்  பிஸ்கட் கம்பெனியில்  திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது. டாட்டா ஏசி வாகனம் பறிமுதல். 

நிலக்கோட்டை அருகே, தனியார்  பிஸ்கட் கம்பெனியில்  திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது. டாட்டா ஏசி வாகனம் பறிமுதல். 

எழுதியவர்: Askar July 12, 2026, 7:57 pm
நிலக்கோட்டை அருகே, தனியார்  பிஸ்கட் கம்பெனியில்  திருடிய சிறுவன் உட்பட 4 பேர் கைது. டாட்டா ஏசி வாகனம் பறிமுதல்.
நிலக்கோட்டை அடுத்த, மீனாட்சிபுரம் பிரிவு அருகே உள்ள தனியார்  பிஸ்கட் கம்பெனியில் இரும்பு பொருட்களை திருடிய சிறுவன் உள்பட 4 பேர், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அடுத்த,  மீனாட்சிபுரம் பிரிவு அருகே  தனியார் பிஸ்கட்  தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் உள்ள இரும்பு பொருட்களை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கம்பெனி  மேலாளர் மற்றும் நிறுவன ஊழியர்களின் மூலமாக சிசிடிவி கேமராவில் பதிவு செய்த காட்சிகளை வைத்து,  திருடியது நபர்கள் யார்?  என ஆய்வு செய்தனர்.
அப்போது, 4 நபர்கள் திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறை  சார்பு ஆய்வாளர் சேது மாதவன் என்பவரிடம்  நிறுவன உரிமையாளர் ப்ரீத்திக் செட்டி கொடுத்த புகாரின் பேரில்,  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், நிலக்கோட்டை அருகே  மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த  வெற்றிவேல்  (32) ரகு (26)  மற்றும் நிலக்கோட்டையைச் சேர்ந்த நவீன்குமார் (23) கொங்கர்குளத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் இரும்பு பொருட்களை  திருடிய தெரிய வந்தது.
இதுகுறித்து, நான்கு நபர்களை  கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம்  மதிப்புள்ள இரும்பு பொருட்களை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் இரும்பு பொருட்களை திருடிசெல்ல பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!