நிலக்கோட்டை பேரூராட்சியில்,
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு.
நிலக்கோட்டை பேரூராட்சியில்,
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக, சனிக்கிழமை கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக, மாவட்ட சுகாதார அலுவலர் டி.ஆர்.செல்வகுமார் உத்தரவின் பெயரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், பூபதி, செல்வகுமார் ஆகியோர் நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பஞ்சர் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களில் மழை நீர் தேங்கி அதில் கொசுப்புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டு அந்த டயர்கள் வண்டிகளில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
மேலும் தேவையற்ற மற்றும் வீணான பொருட்களை திறந்த வெளியில் வீசுவதால், அதில் மழை நீர் தேங்கி கொசு புழு உற்பத்தி ஆகி டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா, யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவும் என்பதால், கடை உரிமையாளர்களுக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.