கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஏ.கே.எஸ். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏ.கே.எஸ். காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகளான அப்துல் ரகுமான், முஹம்மது நிவாஸ், செய்யது, ஜான்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அப்பகுதியில் நிலவி வரும் சாலை, குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி குறைகள் குறித்து குடியிருப்போர் சட்டமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக் கொண்ட சுனில் ஆனந்த், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தேவையான அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
வருகை தந்து மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியளித்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஏ.கே.எஸ். காலனி பகுதி குடியிருப்போர் மற்றும் நலச் சங்க நிர்வாகிகள் நன்றியைத் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.