09 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய நகராட்சி கழிவறையில் அதிக கட்டணம் வசூல்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு மனு.!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய நகராட்சி கழிவறையில் அதிக கட்டணம் வசூல்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு மனு.!

எழுதியவர்: Baker BAker July 9, 2026, 10:48 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிவறையில் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி ஆணையாளர் அமுதாவிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவை சிஐடியு பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முஹம்மது அலி ஜின்னா, அப்துல் சமது, கனகாமணி, சாணவாஸ் மற்றும் லூயிஸ்ராஜ் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையாளர் அமுதா, மனுவில் கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பொதுமக்களிடம் விதிமுறைகளுக்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!