நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில்u மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 07.07.2026 காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்: சீதபற்பநல்லூர் உபமின் நிலையத்தில் 07/07/2026 செவ்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 07.07.2026 காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 வரை மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். இத்தகவலை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்: 33/11KV தியாகராஜ நகர் துணை மின் நிலையங்களில் வருகிற 07.07.2026 செவ்வாய்க் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே தியாகராஜ நகர், மகாராஜா நகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O. B காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன் நகர், ராம் நகர், காமராஜர் சாலை, அன்பு நகர், என் எச் காலனி, சித்தார்த் நகர் மற்றும் லக்கி காலனி ஆகிய பகுதிகளில் 07.07.2026 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். இத்தகவலை திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் கோட்டம்: 110/11KV நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் வருகின்ற 07.07.2026 செவ்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி, மற்றும் தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் 07.07.2026 காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்டம்: 110/33-11KV விக்கிரமசிங்கபுரம் மற்றும் 33/11KV ஆழ்வார் குறிச்சி துணைமின் நிலையங்களில் 07/07/2026 செவ்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே காரையார், சேர்வலார், பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடைய கருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலை பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P. நாடானூர், துப்பாகுடி, கலிதீர்த்தான் பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளையார்குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 07.07.2026 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். இத்தகவலை கல்லிடைக் குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் M. சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்டம்: கூடன்குளம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 07.07.2026 செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார் புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் 07.07.2026 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் தா. வளன் அரசு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.