04 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே லாரி மோதி 76 வயது முதியவர் பலி.!

திருவாடானை அருகே லாரி மோதி 76 வயது முதியவர் பலி.!

எழுதியவர்: Baker BAker July 4, 2026, 11:52 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கப்பக்குடியைச் சேர்ந்த 76 வயதான சுப்பிரமணி, ஆனந்தூர் பகுதியில் சாலையோரமாக நடந்து சென்றபோது அணை கட்டுமானப் பணிக்காகப் பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து, சாலைகளில் பாதசாரிகளின் பாதுகாப்பு எந்த அளவுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதையும், கனரக வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டுகிறது.

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க, கனரக வாகன ஓட்டுநர்களுக்கு கடுமையான கண்காணிப்பு, வேகக் கட்டுப்பாடு, சாலையோர பாதுகாப்பு வசதிகள், பாதசாரிகளுக்கான நடைபாதைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக லாரியை செய்யப்பட்டு ஓட்டுனரை கைது செய்த ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!