04 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பள்ளி எதிரே சிகரெட், பீடி விற்பனை: கடைக்காரர் கைது – புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.!

கீழக்கரையில் பள்ளி எதிரே சிகரெட், பீடி விற்பனை: கடைக்காரர் கைது – புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.!

எழுதியவர்: Baker BAker July 4, 2026, 7:19 pm

கீழக்கரை: பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், பள்ளியின் எதிரே சிகரெட் மற்றும் பீடிகள் விற்பனை செய்து வந்த கடைக்காரர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளியின் எதிரே செயல்பட்டு வந்த சிவா ஸ்டோர் என்ற பெட்டிக்கடையில், சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், தனி பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

 

சோதனையில் கடையை நடத்தி வந்த சிவா (தந்தை: நாகராஜன்) என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 160 கட்டுகள் செய்யது பீடி, 42 பாக்கெட்டுகள் மினி குட்டி பீடி, 25 பாக்கெட்டுகள் Parish SPL சிகரெட், 10 பாக்கெட்டுகள் GTPL Step Filter சிகரெட் மற்றும் 17 கட்டுகள் New 777 SPL பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இதையடுத்து, அவர் மீது   வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்ட குற்றமாகும். இவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

 பொதுமக்கள் கல்வி நிறுவனங்களின் அருகே நடைபெறும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, மாணவர்களின் பாதுகாப்புக்கும் புகையிலை இல்லா சமூகத்தை உருவாக்கவும் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!