ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதன் தாக்கத்தால், ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது.
இதன் காரணமாக, கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக மீன்பிடி படகுகள் மணலில் சிக்கிக்கொண்டன. மாலை நேரத்தில் கடல் மட்டம் உயர்ந்த பிறகே படகுகளை மீட்க முடியும் என்பதால், மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் காலங்களில் இந்த பகுதியில் கடல் அடிக்கடி உள்வாங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். எனவே, ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, கடலின் ஆழத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.