04 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி வழங்கும் நிகழ்ச்சி.!

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி வழங்கும் நிகழ்ச்சி.!

எழுதியவர்: Baker BAker July 4, 2026, 9:27 am

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், கல்வி ஆராய்ச்சி மற்றும் மனித மேம்பாட்டு கழகம் அறக்கட்டளை மற்றும் எம்.கே. ட்ரான் ஆட்டோபார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி அமைத்து வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் பொருளாளர் மு. முருகன் தலைமை தாங்கினார். இதில் அறக்கட்டளையின் தலைவர் சு. மணிகண்டன் மற்றும் தீக்கதிர் அ. முத்துமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு கழிப்பறை வசதிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சமூக சுகாதாரம், தூய்மை மற்றும் திறந்தவெளி மலம்கழிப்பை ஒழிக்கும் நோக்கில் இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!