ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள நாடார் குடியிருப்பு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் 22 மூட்டைகளில் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தில் இருந்த வடக்கு மேதலோடை கிராமத்தைச் சேர்ந்த சத்திய பிரபு என்பவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில், அந்த பீடி இலை மூட்டைகளை கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சத்திய பிரபுவை கைது செய்த திருப்புல்லாணி போலீசார், அவரிடமிருந்த 22 மூட்டை பீடி இலைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? மற்றும் இலங்கையில் யாரிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




You must be logged in to post a comment.