ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தமிழ்நாடு ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு 2026, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இத்தேர்வின் தாள்–I தேர்வு 2026 ஜூலை 4-ஆம் தேதி மற்றும் தாள்–II தேர்வு 2026 ஜூலை 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய நுழைவுச்சீட்டுடன், கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். அடையாள அட்டையின் நகல் (Photocopy) ஏற்றுக்கொள்ளப்படாது. அசல் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், நுழைவுச்சீட்டில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லாத தேர்வர்கள் மூன்று பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்களை கொண்டு வந்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும். காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவுவாயில் மூடப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் எந்த காரணத்திற்கும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுருபிரபாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.