தென்காசி மாவட்டத்தில் வாகனங்கள் அதிவேகத்துடன் இயக்கப்படுவதாலும், கவனமற்ற வாகன ஓட்டிகளாலும் புள்ளிமான் உயிர் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆய்க்குடியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், அமர் சேவா சங்கம் அருகே புள்ளி மான் ஒன்று வாகனம் மோதி உயிரிழந்தது. ஆய்க்குடி பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வன விலங்குகள் சாலையைக் கடக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. எனவே ஆய்க்குடி – தென்காசி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.