30 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இஸ்லாம் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

பரமக்குடியில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

எழுதியவர்: Baker BAker June 30, 2026, 7:55 pm

இஸ்லாத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோருக்கு (பி.சி.எம்.) என்ற வகையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என சாதிச் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் இன்று (30.06.2026) பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்டத் தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் மற்றும் மத்திய மாவட்டத் தலைவர் பிரிமியர் இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ். சலிமுல்லாஹ்கான் சிறப்புரையாற்றினார். மேலும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகவை அக்பர் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!