29 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உதகை நகராட்சி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் உறுதி.!

உதகை நகராட்சி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் உறுதி.!

எழுதியவர்: Baker BAker June 29, 2026, 9:50 pm

உதகை நகராட்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் இன்று முதல் நடத்துவதாக அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.

பணிக்குத் தேவையான துப்புரவு மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், CL, ML, EL விடுப்புகளை உறுதி செய்தல், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட நிலுவை பலன்களை வழங்குதல், CPS பணியாளர்களின் ஓய்வூதிய பலன்களை வழங்குதல், பழுதடைந்த வாகனங்களை சீரமைத்தல், ஒப்பந்தத் தொழிலாளர்களை 8 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவதை நிறுத்துதல், நிலுவையில் உள்ள ESI, EPF தொகைகளை செலுத்துதல் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளின் நியாயத்தை நிர்வாகம் ஏற்று, அவற்றை விரைவில் செயல்படுத்த உறுதியளித்ததைத் தொடர்ந்து, சி.ஐ.டி.யு. அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!