வேட்டை தடுப்பு காவலர் பணிகளை தனியார் மயமாக்க கூடாது; நீண்ட காலம் (10 ஆண்டுகளுக்கு மேல்) பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெதர்மேன் ராஜா அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை: தமிழ்நாடு வனத்துறையில் வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் காடுகளின் கண்காணிப்புப் பணிகளில் “வேட்டை தடுப்பு காவலர்கள்” (Anti-Poaching Watchers – APWs) மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.
காடுகளின் உண்மையான காவலர்களான வேட்டைத் தடுப்புக் காவலர்களை தனியார் நிறுவனங்களுக்கு வெளியொப்பந்தம் (Outsourcing) செய்யும் திட்டத்தை, தற்போதைய அரசு முற்றிலும் கைவிட வேண்டும்!
பழங்குடியினரின் வாழ்வாதாரத்தையும், பணிப் பாதுகாப்பையும் சீரழிக்கும் முடிவை அரசு எடுக்க கூடாது. தமிழகத்தில் உள்ள வன உயிரின சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில், வன விலங்குகளை வேட்டையாளர்களிடம் இருந்து பாதுகாக்கவும், வனப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் உள்ளூர் மக்கள் வேட்டை தடுப்பு காவலர்களாக (Anti-Poaching Watchers) நியமிக்கப்படுகின்றனர்.
தற்காலிக ஊதிய அடிப்படையில் பணியாற்றும் இவர்களை, வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் தனியாரிடம் (Outsourcing) ஒப்படைக்கக் கூடாது. நீண்ட காலம் (10 ஆண்டுகளுக்கு மேல்) பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.