ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் இளைஞர்களை ஒருங்கிணைத்து சமூக, கல்வி மற்றும் நலப்பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் “வடக்குத்தெரு ஜமாஅத் இளைஞர்கள் சங்கம் (VJIS)” என்ற புதிய இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 23-ம் தேதி வடக்குத்தெரு தைக்காவில், இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வடக்குத்தெரு ஜமாஅத் தலைவர் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் புதிய இளைஞர் அமைப்பைத் தொடங்குவது ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அமைப்பிற்கு “வடக்குத்தெரு ஜமாஅத் இளைஞர்கள் சங்கம் (VJIS)” எனப் பெயரிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், தலைவராக ஹமீது ராஜா, துணைத் தலைவர்களாக ரியாஸ் மற்றும் நூர்தீன், செயலாளராக முகம்மது அப்சல், துணைச் செயலாளர்களாக அர்ஷத் அலி, அப்துல் ஹுசைன், சீனியப்பா, பொருளாளராக அரபாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஜாவித் மற்றும் வாரிஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதேபோல், சங்குமால் லைன்–ரூபி கார்டன்–மணல்மேடு, முகைதீன்யா பள்ளி–P.A. வெட்டை, CSI பள்ளி, வைக்கப்பட்டை, செகப்பா ஜங்ஷன் மற்றும் தைக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு பகுதி கோ-ஆர்டினேட்டர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின்படி சங்கத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செயல்படுவார்கள் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.




You must be logged in to post a comment.