26 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரி அமைச்சர்களிடம் மனு.!

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரி அமைச்சர்களிடம் மனு.!

எழுதியவர்: Baker BAker June 26, 2026, 8:54 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் முகம்மது சுபைர் , சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ராஜீவை நேரில் சந்தித்து, கீழக்கரையில் கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் இதனைத் தடுக்க கீழக்கரையில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Sewage Treatment Plant) அமைக்க கோரியும் கீழக்கரைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் பிரிவிலும் பல்வேறு பொதுநலக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கீழக்கரை நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சிறுபான்மையினருக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை அதிகரித்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் உயர்கல்வி உதவிகளை உயர்த்துதல், மேலும் எளிய மக்களுக்கான உயர்மருத்துவ சிகிச்சை காப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

 

கீழக்கரை மக்களின் நீண்டகால நலன் மற்றும் நகரின் நிலையான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மேற்கண்ட கோரிக்கைகள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் முகம்மது சுபைர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

 

 

மேலும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் சார்பில் கீழக்கரையில் அடிப்படைத் தேவைகள் குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்றது அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!