கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
மேட்டுப்பாளையம் அபிராமி திரையரங்கு அருகில் தொடங்கிய இப்பேரணியை மேட்டுப்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் எல். பாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை ஒழிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் உதவி பேராசிரியருமான ரம்யா தேவி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம். சதீஷ்பாபு உள்ளிட்ட காவல்துறையினரும் பேரணியில் பங்கேற்றனர்.




You must be logged in to post a comment.