கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த அரசுப் பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் மற்றும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேலும், மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழா பள்ளி தலைமையாசிரியர் எஸ். செல்வ பாரத் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரன் நாச்சிமுத்து, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற முன்னாள் தலைமையாசிரியர்கள் இந்திரா மற்றும் ஜெமீமா, தமிழாசிரியர் பன்னீர்செல்வம், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆனந்தக்குமார், மனிதநேய பண்பாளர் குழுவைச் சேர்ந்த கலைச்செல்வன், ஆடிட்டர் ரபிதீன், அப்பாஸ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுகுணா மற்றும் துணைத் தலைவர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நன்கொடைகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளியின் சார்பில் சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியரை பாராட்டி சென்றனர்.




You must be logged in to post a comment.