22 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் எஸ்டிபிஐ 18-ஆம் ஆண்டு தொடக்க தின பொதுக்கூட்டம்: மின்தடை, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

கீழக்கரையில் எஸ்டிபிஐ 18-ஆம் ஆண்டு தொடக்க தின பொதுக்கூட்டம்: மின்தடை, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

எழுதியவர்: Baker BAker June 22, 2026, 4:22 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ)யின் 18-ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நகர் பொருளாளர் கலீல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.

நகர் தலைவர் முகமது ஜலில் வரவேற்புரையாற்றினார். நகர் செயலாளர் கீழை அஸ்ரப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நகர் இணைச் செயலாளர் ஹமீத் பைசல் கருத்துரையாற்றினார். திமுக நகர செயலாளர் பஷீர், இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி, நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கிழக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் வாழ்த்துரை மற்றும் கருத்துரையாற்றினர். தமிழ் மாநில துணைத் தலைவர் பி. அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கீழக்கரையில் நிலவி வரும் கடுமையான மின்தடையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்; தவறினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், பள்ளி மாணவர்களின் அதிவேக இருசக்கர வாகனப் பயணத்தை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகங்களும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி அவற்றை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் வாசிம், திருவாடானை தொகுதி துணைத் தலைவர் மூர்த்தி, நகர் துணைத் தலைவர்கள் ஹாஜா அலாவுதீன், அபுதாஹீர், கிளை நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!