24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.!

எழுதியவர்: Baker BAker June 24, 2026, 12:16 pm

கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் நீர் சேகரிக்கும் கிணறுகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இத்திட்டத்தின் மூலம், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 2,306 ஊரகக் குடியிருப்புகளுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்கும் காவேரி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.

 

ஆய்வின்போது, நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், நீர் சேகரிக்கும் கிணறுகளின் நிலை, குடிநீர் விநியோகத்திற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், திட்டப் பணிகள் தரமாகவும், விரைவாகவும் நிறைவேற்றப் படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிலையான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!