22 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: பசும்பொன் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா.!

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: பசும்பொன் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா.!

எழுதியவர்: Baker BAker June 22, 2026, 11:52 am

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதலின்படி 10 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அத்திட்டத்தின் ஒரு பகுதியாக,  கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பொன் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன், மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷூ நிகம்,  ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
நிகழ்வின் போது அரசு அலுவலர்கள், கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGS) பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
இன்றைய நிகழ்வில் மொத்தம் 340 மரக்கன்றுகள் நடப்பட்டன. பாரிஜாதம், மந்தாரை (Bauhinia purpurea), நறுவிலி (Cordia sebestena), புன்னை, பூவரசு, அரளி, சரக்கொன்றை, புத்திரஜீவா, குடை அரளி மற்றும் ஆப்பிரிக்கன் துளிப் உள்ளிட்ட 11 வகையான மர இனங்கள் இதில் இடம்பெற்றன.
மரக்கன்றுகளை நட்டுவிட்டு விடாமல், அவற்றை முறையாக பராமரித்து வளர்ப்பதும் மிகவும் அவசியம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். மேலும், பசுமை வளத்தை பெருக்கி எதிர்கால தலைமுறைக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் அனைவரும் மரம் நடும் பணிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!