18 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்கக் கோரி தமிழ்ப் புலிகள் கட்சி மனு.!

இராமநாதபுரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்கக் கோரி தமிழ்ப் புலிகள் கட்சி மனு.!

எழுதியவர்: Baker BAker June 17, 2026, 9:14 am

இராமநாதபுரம் மாவட்டத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் சட்ட மேதையுமான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெருமையைப் போற்றும் வகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய இடத்தில் வெண்கலச் சிலை நிறுவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள் இன்றைய இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரவுவதற்கும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூர்வதற்கும் இந்தச் சிலை அமைக்கப்படுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!