18 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு பள்ளிக்கு புதிய குடிநீர் தொட்டி அர்ப்பணிப்பு..

செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு பள்ளிக்கு புதிய குடிநீர் தொட்டி அர்ப்பணிப்பு..

எழுதியவர்: Abubakker Sithik June 17, 2026, 11:13 pm

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக குடி தண்ணீர் தொட்டி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மீரான் (சாலை ஆய்வாளர் (ஓய்வு), பி.உலகநாதன் பல்கலைக்கழகம்-(ஓய்வு), மற்றும் பாபு ஆகியோர் உதவியோடு புதிதாக தண்ணீர் தொட்டி நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியை. ராதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் ராமசாமி, நூலகர் (ஓய்வு) முன்னிலை வைத்தார். சங்க நிர்வாகி சதீஷ் வரவேற்றார். செங்கோட்டை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஜெசிலட், SMSS. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு, பொருளாளர் ஆறுமுகம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை பாமா நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!