15 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலமடை கிராமத்திற்கு தனி கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு.!

மேலமடை கிராமத்திற்கு தனி கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு.!

எழுதியவர்: Baker BAker June 15, 2026, 7:32 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துடன் மேலமடை, படிப்பான், கருக்காத்தி, கருக்காத்தி காலனி, படிப்பான் காலனி, மேலமடை காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

தற்போது கிராம மக்கள் தங்களது குடியிருப்பு சான்று, வருமானச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட அத்தியாவசிய அரசுப் பணிகளுக்காகவும், கோரிக்கை மனுக்களை வழங்கவும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், முதியோர், பெண்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக மேலமடை கிராமத்திற்கு தனி கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ. அலுவலகம்) அமைத்து தனி குரூப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேலமடை கிராமத் தலைவர் ஜெய சருவந்தம் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!