15 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பழைய வத்தலக்குண்டுவில் சரித்திர பதிவேடு குற்றவாளி  வெட்டிக் கொலை.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விசாரணை…

பழைய வத்தலக்குண்டுவில் சரித்திர பதிவேடு குற்றவாளி  வெட்டிக் கொலை.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விசாரணை…

எழுதியவர்: Askar June 15, 2026, 2:27 pm
பழைய வத்தலக்குண்டுவில் சரித்திர பதிவேடு குற்றவாளி  வெட்டிக் கொலை.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விசாரணை…
வத்தலக்குண்டு அடுத்த, பழைய வத்தலக்குண்டுவில் சரித்திர பதிவேடு குற்றவாளி 4 பேர் கொண்ட கும்பலால் ஞாயிற்றுக்கிழமை இரவு  வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு அருகே, பழைய வத்தலகுண்டுவைச் சேர்ந்த பாலமுருகன் இவரது மகன்  லோகேஸ்வரன் (25) இவர் மீது வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள்  நிலுவையில் உள்ளது.
லோகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், பழைய வத்தலக்குண்டு ஓம் சக்தி கோவில் அருகே  அமர்ந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்து அருவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4-பேர்  கொண்ட கும்பல் லோகேஸ்வரனை  சரமாரியாக வெட்டி விட்டு அந்த அந்தப் பகுதியில் உள்ள கண்மாய்க்குள் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ரத்த வெள்ளத்தில்  கிடந்த லோகேஸ்வரனை சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில்  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வத்தலக்குண்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, வெட்டிக் கொலை செய்யப்பட்ட லோகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.    இருசக்கர வாகனம் திருடி விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக  மதுரையைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் லோகேஸ்வரனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!