சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியின் 6-வது வார்டில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறு குழந்தைகளுக்காக ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், திமுக நகரச் செயலாளர் பெரிய பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அங்கன்வாடி ஆசிரியர் மேனகா, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் புகழேந்தி, அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்தலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
புதிய அங்கன்வாடி கட்டிடம் மூலம் அப்பகுதியில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கல்விச் சூழல் உருவாகும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.




You must be logged in to post a comment.