திண்டுக்கல்லில் மெத்தப்பட்டமைன், கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது – கஞ்சா, மெத்தப்பட்டமைன், கார், டூவீலர்கள், செல்போன்கள் பறிமுதல்!
திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது நாகல்நகரில் மெத்தப்பட்டமைன், கஞ்சா விற்பனை செய்த ஈரோடு-ஐ ரகுராம்(33), திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த அப்துல்பாசித்(32) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.1/4 கிலோ கஞ்சா, 80 மில்லி கிராம் மெத்தப்பட்டமைன், கார், 2 டூவீலர்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்




You must be logged in to post a comment.