15 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு மற்றும் கூடுதல் ரயில் வசதிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கோரிக்கை.!

மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேம்பாடு மற்றும் கூடுதல் ரயில் வசதிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கோரிக்கை.!

எழுதியவர்: Baker BAker June 14, 2026, 3:32 pm

மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு. பொதுத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளான தோழர்கள் பாஷா ஹபிபுல்லா, முகமது அலி ஜின்னா மற்றும் சானவாஸ் ஆகியோர் குன்னூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். சந்திப்பின்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், கூடுதல் ரயில்கள் இயக்குதல், மேலும் ஏற்கனவே ரயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்–கோவை மெமு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், காட்டூர் ரயில்வே கேட் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தி வழங்கியதற்காக ரயில்வே நிர்வாகம், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க நிரந்தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ் மொழி தெரியாத தென்னக ரயில்வே பொது மேலாளர், மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை பொறுமையாகக் கேட்டறிந்தார். மேட்டுப்பாளையம் குறித்து உரையாடியபோது, காட்டூர் ரயில்வே கேட் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததா என அக்கறையுடன் விசாரித்தார். அதற்கு சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். மொழிபெயர்ப்பாளர் வாயிலாக அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த பொது மேலாளர், அவற்றை முறையாகப் பதிவு செய்து, விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். எனவே, தங்களது கோரிக்கைகளை செவிமடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதியளித்த தென்னக ரயில்வே பொது மேலாளர், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு. பொதுத் தொழிலாளர் சங்கம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!