தென்காசி மாவட்டத்தில் மைய நூலகம் செல்லும் வழியை அடைத்து தடையினை ஏற்படுத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; தென்காசி மைய நாலகம் செல்வதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழியினை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்காசி மாவட்ட மைய நூலகம் இசிஈ அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தின் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் 95,000 நூல்கள் 12 ஆயிரம் உறுப்பினர்கள் 280 புரவலர்களுடன், போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் மூலம் இதுவரை 400ம் மேற்பட்ட பட்டதாரிகள் அரசு பணி பெறுவதற்கு தென்காசி நூலகம் காரணமாக இன்றளவும் இருந்து வருகின்றது.
தற்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஆண் பெண் பட்டதாரிகள் 500-ம் மேற்பட்டோர் நூலகத்தில் பெயர் பதிவு செய்து, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு இலவச பயிற்சி, இலவச மெட்டீரியல்ஸ், இலவச மாதிரி தேர்வும் வழங்கப்பட்டு நூலகம் இன்றும் வழிகாட்டியாக உள்ளது.
பள்ளி மாணவ செல்வங்களுக்கு என்எம்எம்ஸ் ஸ்காலர்ஷிப்க்கு மாவட்ட அளவில் இலவசமாக பயிற்சி, மாதிரி தேர்வு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு உதவித்தொகை பெறுவதற்கு தென்காசி நூலகமும் காரணமாக இருந்து வருகிறது. மேலும் நூலக வார விழா, உலக புத்தக தின விழா, தமிழறிஞர்கள் பிறந்த நாள் விழா, திருவள்ளுவர் விழா, நூல் அறிமுக விழா, இலக்கிய விழா, விழிப்புணர்வு முகாம், பள்ளி மாணவ மாணவியருக்கு போட்டிகள் என அனைத்து வயதினரும் வாசகர்களாக, தென்காசி நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கு பிரதான சாலை வழியாக பள்ளி நுழைவு வழியாக தெற்கு காம்பவுண்டு சுவரினை ஒட்டிய நடைபாதை 10 அடி பயன்படுத்தி கொள்ள அப்போதைய ஆட்சித்தலைவர் ஆகாஷ் அனுமதி வழங்கினார். இதனை முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் ஏற்று கொண்டனர். தற்போது வரை இவ்வழியாக எவ்வித இடையூறும் இன்றி நூலக வாசகர்கள் ஆண் பெண் பட்டதாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நூலகம் செல்ல இதுவரை பயன்பாட்டில் இருந்து வந்த வழி திடீரென தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கு வரும் பெண்கள் போட்டி தேர்விற்கு இரவு வரை பயின்று வரும் பட்டதாரி இளைஞர் இளைஞிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மைய நூலகம் செல்வதற்கு ஏற்கனவே இதுவரை நடைமுறையில் உள்ள வழியினை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.