11 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » TNPSC – TNUSRB – SSC – RRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; கலெக்டர் தகவல்..

TNPSC – TNUSRB – SSC – RRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; கலெக்டர் தகவல்..

எழுதியவர்: Abubakker Sithik June 11, 2026, 7:24 pm

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC-TNUSRB-SSC-RRB போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தேர்வு முகமைகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB. SSC. மற்றும் RRB, போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பணியாளர் தேர்வாணையத்தால் SSC CGL 12,256 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் விண்ணப்பம் செய்ய கடைசி நாள் ஜூன் 22.06.2026, இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களை அறிய https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும். இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (கதவு எண் 168 முகமதியா நகர் . KFC பின்புறம்) குத்துக்கல் வலசையில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 17.06.2026 புதன் கிழமை காலை 10.30. மணிக்கு துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு Smart Board பயன்படுத்தி நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்புத் துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் வலை தளத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Tenkasi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் 04633-213179 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. SSC – CGL 2026 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!