ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அரியமான் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பிரெகாபலின் காப்சூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளர் ஜீவ மணி தர்மராஜ் தலைமையிலான போலீசார், இரவு கடத்தல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியமான் கடற்கரை அருகே உள்ள ஒரு தோப்பில் சந்தேகத்திற்கிடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 அட்டைப் பெட்டிகளை சோதனையிட்டனர். சோதனையில், அந்தப் பெட்டிகளில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள 96,000 எண்ணிக்கையிலான PREGABALIN 150 மி.கி. காப்சூல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து காப்சூல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மருந்துப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலை கண்டறியும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரியமான் கடற்கரையில் இலங்கைக்கு கடத்த இருந்த மாத்திரைகள் பறிமுதல்.!
எழுதியவர்: Baker BAker June 11, 2026, 1:54 pm




You must be logged in to post a comment.